மதுரையில் மீனாட்சியம்மனை முதலில் தரிசிப்பது ஏன்?
                              ADDED :1270 days ago 
                            
                          
                           
 மலையத்துவஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தவள் மீனாட்சி. பாண்டிய நாட்டு இளவரசியான இவளுக்கு பட்டாபிேஷகம் நடத்தினார் மன்னர். திக்குவிஜயம் புறப்பட்ட அவள், கயிலாயத்தில் சிவபெருமானைக் கண்டாள். அவர் மீது காதல் கொண்டு திருமணம் புரிந்தாள். பாண்டிய நாட்டின் மகாராணியாக அரியாசனத்தில் அமர்ந்தாள். இதனடிப்படையில் மதுரையின் அரசியான மீனாட்சியை முதலில் தரிசிக்கும் வழக்கம் உருவானது.