உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு கரங்களுடன் வேலவன் தரிசனம்!

நான்கு கரங்களுடன் வேலவன் தரிசனம்!

பொள்ளாச்சி நகரில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான் ஒரு முகம் கொண்டு நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக மயில்மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். மயிலின் தலை இடப்புறம் திரும்பியுள்ளதால், இது தேவமயில் எனப்படும், திருவாட்சி, மயில், முருகன், திருவடிவம் எல்லாம் ஒரே கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது இக்கோயிலில் உள்ள ஒற்றைக்கல்லாலான கற்சங்கிலி காணக்கூடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !