காலியிடத்தில் நவதானியம் விதைத்து வீடு கட்டுகிறார்களே! ஏன்?
ADDED :1329 days ago
பசுவின் பாதம் பட்ட இடம் புனிதம் பெறும் என்பது ஐதீகம். ராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டும் முன், அந்த இடத்தில் தொழுவம் அமைத்து பசுக்களைத் தங்க வைத்ததாக கல்வெட்டு செய்திகூறுகிறது. புதிய வீடு, கோயில் மட்டுமில்லாமல் பழைய வீட்டை இடித்து புதுப்பித்தாலும் அந்த இடத்தில் தானியம் விதைத்து பசுக்களை மேயச் செய்வதுண்டு. இதனால் முன்னோர் சாபம் நீங்கும்.