ராமேஸ்வரம் கோயிலில் ஈரத்துணியுடன் பிரகாரத்தைச் சுற்றலாமா?
ADDED :1328 days ago
தீர்த்தங்களில் நீராடி ஈரத் துணியுடன் கோயிலை வலம் வரக்கூடாது. உலர்ந்த ஆடையை உடுத்தியே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம் மட்டுமில்லாமல் எல்லா திருத்தலங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். ராமேஸ்வரத்தில் ஈர ஆடையுடன் உலா வர வேண்டாம் என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.