உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூரில் வீரபாண்டி திருவிழாவிற்காக தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

கூடலூரில் வீரபாண்டி திருவிழாவிற்காக தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

கூடலுார்: கூடலுாரில் வீரபாண்டி திருவிழாவிற்காக நூற்றுக்கணக்கானோர் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வீரபாண்டி திருவிழா நேற்று துவங்கியது. இதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கூடலூரில் நூற்றுக்கணக்கானோர் தீச்சட்டி எடுத்தனர். வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள காளியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இதற்காக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கருணாநிதி காலனியில் இருந்து காளியம்மன் கோயில் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் நடந்துவரும் பக்தர்களுக்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹிந்து முன்னணியினர், பக்தர்கள் சார்பில் பல இடங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !