வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’ என்றால் என்ன?
ADDED :1248 days ago
ரிஷிகளில் தலைமையானவர் வசிஷ்டர். தவத்தில் ஈடுபடுவோரை ரிஷியாக அங்கீகரிக்கும் அதிகாரம் பெற்றவர். முன்பு மன்னராக இருந்த கவுசிகன், தவத்தில் ஈடுபட்ட போது நீண்ட காலத்திற்குப் பிறகே அவரை ரிஷியாக வசிஷ்டர் ஏற்றார். இந்த கவுசிகனையே ‘உலகின் நண்பன்’ என்னும் பொருளில் ‘விஸ்வாமித்திரர்’ எனப் போற்றுகிறோம்.