உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்பார்பட்டியில் பிரதோஷ விழா

வேம்பார்பட்டியில் பிரதோஷ விழா

கோபால்பட்டி:  வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. முன்னதாக விஸ்வநாதருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பஜனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர். இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !