செங்கமடை முனீஸ்வரர் கோவில் விழா துவக்கம்
ADDED :1271 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை ஸ்ரீ கோட்டை முனீஸ்வரர், கருப்பண சுவாமி கோவில் வைகாசி விழா, நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காப்பு கட்டுதல் நிகழ்வை முன்னிட்டு, மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மே.10 ல் நடைபெறும், பூக்குழி விழாவுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.