உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் ஒரே நாளில் 105 திருமணங்கள்

திருத்தணியில் ஒரே நாளில் 105 திருமணங்கள்

திருத்தணி:திருத்தணி நகரில், நேற்று ஒரே நாளில், 105 ஜோடிகளுக்கு, திருமணம் நடந்தது. முருகன் மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று, திருமண முகூர்த்த நாள் என்பதால், முருகன் மலைக்கோவிலில், 26 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.இதுதவிர, நகரத்தில் உள்ள, 79 திருமண மண்டங்களிலும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் மணமக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொது வழியில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.சிறப்பு தரிசன கட்டண வழியிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.இன்றும், திருமண முகூர்த்த நாள் என்பதாலும், வெள்ளிக்கிழமை என்பதாலும், முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !