குறைகளை நிறைகளாக்குவோம்
ADDED :1228 days ago
ஆப்ரகாம் லிங்கன் முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதியானார். அப்போது நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஒரு சிறுமியை பாராட்டினார் அவர். இதைப்பார்த்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
‘‘என்ன அப்படி பார்க்கிறீர்கள். உண்மையாகவே நான் ஜனாதிபதி ஆக இவரே காரணம்’’ என சிரித்தார் லிங்கன்.
‘அந்த சிறுமி அப்படி என்ன செய்துவிட்டாள்’ என பலரும் யோசிக்க ஆரம்பித்தனர்.
‘‘நான் ஒல்லியான உடல்வாகு கொண்டவன். எனது முகத்தில் அம்மைத் தழும்பு வேறு இருந்தன. இதனால் நான் மனம் உடைந்து போய் இருந்தேன். அப்போது இந்த சிறுமிதான் இதுவெல்லாம் ஒரு பிரச்னையா? என ஆறுதலாக பேசினாள்’’ என சொன்னார் லிங்கன்.
இவரைப்போல சிறு குறைகளை எல்லாம் பெரிதாக்கி வருந்துபவரா நீங்கள்..வருத்தப்படாதீர்கள். உங்களிடம் என்ன குறை இருந்தாலும் ஆண்டவர் சரிசெய்வார்.