திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ஆனந்த, கமல வாகனம்
நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சுமார் 400 வருடங்களுக்கு பிறகு வரும் ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது. இதை முன்னிட்டு கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த் சிற்ப ரத்னா கலைக்கூடத்தில், ஆச்சார்யா செல்வ ராஜா தலைமையிலான சிற்ப குழுவினர் ஆனந்த வாகனம், கமல வாகனத்தை உருவாக்கி உள்ளனர். ஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்த பழமையான ஆனந்த வாகனம், கமல வாகனம் பழுதடைந்து விட்டதால் செப்பு தகட்டில், வெள்ளி முலாம் பூசப்பட்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் நேற்று மதியம் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆதிகேசவ பக்தசேவா சங்கம் சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வாகனங்கள் கோவிலுக்கு கொண்டு செ ல்லப்பட்டு, ஆனந்த வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள் உற்சவர் விக்கிரகமும், கமல வாகனத்தில் திருவம்பாடி கிருஷ்ணர் விக்ரகமும் வீதி உலா எடுத்து செல்லப்படும்.