ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1283 days ago
திருப்பூர்: அர்த்தஜாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும், 3வது திங்கட்கிழமை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. அர்த்தஜாம பூஜை அடியார் திருக்கூட்டத்தினரும், மாணிக்கவாசகர் திருக்கூட்டத்தினரும், பங்கேற்று, திருவாசகத்தில் உள்ள, 51 பதிகங்களை பாடி, சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.