வீரராகவர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம்
ADDED :1535 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இன்று, அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் வீரராகவர், முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று, மாலை 6:00 மணியளவில், மாசி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.இந்த உற்சவம், வரும் 30ம் தேதி வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில், ஹிருதாபநாசினி குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் எழுந்தருளி, மும்முறை தெப்பத்தில் வலம் வருவார்.