உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷாவில் கல்லூரி மாணவிகள் கல்வி பயணம்; யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

ஈஷாவில் கல்லூரி மாணவிகள் கல்வி பயணம்; யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், 180 கல்லூரி மாணவிகள், கல்வி மற்றும் அனுபவ பயணம் மேற்கொண்டனர்.


இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில், 180 கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம், கல்வி மற்றும் அனுபவ பயணமாக, கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றனர். அங்கு, ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட ஈஷா வளாகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களை பார்வையிட்டு, அவற்றின் சிறப்புகள், யோக அறிவியல், இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மனித நல்வாழ்விற்கான ஈஷாவின் பல்வேறு முயற்சிகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும், மனஅமைதி, ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !