ஆப்பனூரில் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :1184 days ago
கடலாடி: கடலாடி அருகே ஆப்பனூர் இடைக்குளம் கோட்டை கிராமத்தில் உள்ள பூட்டியா முனியம்மாள் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூலை 3., ஞாயிற்றுக்கிழமை முதல் காலை யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. பூர்ணாஹுதி, சூரிய பூஜை, விநாயகர் பூஜை, கோ பூஜை, தன பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 9 மணியளவில் கடம் புறப்பாடு செய்து பூட்டியா முனியம்மாள் கோயிலில், உத்தரகோசமங்கை நாகநாதர் குருக்கள், பாலசுப்பிரமணிய சிவாச்சியார் ஆகியோர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை ஆப்பனூர் இடைக்குளம் கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.