உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தபுரத்தில் சாகை வார்த்தல் விழா

அனுமந்தபுரத்தில் சாகை வார்த்தல் விழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு பூங்கரகம் வீதியுலா மற்றும் முத்துமாரியம்மன், கெங்கையம்மன் சுவாமிகளுக்கு சாகை வார்த்தல் நடந்தது.நேற்று அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது. கிராம மக்கள் பெங்கலிட்டு வழிபட்டனர்.விழாவையொட்டி இரவு, விநாயகர், முத்துமாரியம்மன் மற்றும் அய்யனாரப்பன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !