பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1192 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, ஹோமம் பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள் சசிதரன் சிதம்பரசூரியவேலு, நாகராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.