உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மாங்கனி திருவிழா: இறைவனுக்கு அம்மையார் அமுது படைக்கும் நிகழ்வு

காரைக்கால் மாங்கனி திருவிழா: இறைவனுக்கு அம்மையார் அமுது படைக்கும் நிகழ்வு

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி விழா நடத்தப்படுகிறது அதன்படி கடந்த 11ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 12ம் தேதி பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடைருத்ராட்சம் அணிந்து வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து மாங்கனிகளை இறைத்தனர். அதைத்தொடர்ந்து வீதி உலா வரும் பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்சென்று அழைத்து அமுது படையல் நிகழ்ச்சி அம்மையார் கோவிலில் நடைபெற்றது. இதில் இனிப்பு,பழங்கள் என பல்வேறு உணவுடன் இரவு இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சியில் நடந்தது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை,தமிழகா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாகதியாகராஜன்,கலெக்டர் முகம்மது மன்சூர், சீனியர் எஸ்.பி. லோகேஸ்வரன், துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் அறங்காவலர் வாரிய தலைவர் வெற்றிச்செல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம்,உறுப்பினர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இரவு புனிதவதியர் புஷப்பல்லக்கில் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !