உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதிதாக செய்யப்பட்ட சிம்ம வாகனத்தில் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் உலா

புதிதாக செய்யப்பட்ட சிம்ம வாகனத்தில் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் உலா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், புதிதாக செய்யப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தார்.காஞ்சிபுரத்தில் பழமையான கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் உள்ளது. அம்மன் வீதியுலா செல்வதற்காக, பக்தர் ஒருவர் 3.5 அடி உயரமும், 5 அடி நீளமும் உடைய புதிதாக செய்யப்பட்ட சிம்ம வாகனம் ஒன்றை கோவிலுக்கு உபயமாக அளித்தார்.புதிதாக செய்யப்பட்ட சிம்ம வாகனத்தில், நேற்று முன்தினம் இரவு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், நான்கு ராஜ வீதிகள் வழியாக கம்பீரமாய் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !