பொந்தப்புளி வாழவந்த அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா
ADDED :1257 days ago
பெருநாழி : பெருநாழி அருகே பொந்தப்புளி வாழவந்த அம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா நடந்தது. ஜூலை 22 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது.நாள்தோறும் மூலவர் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 108 விளக்கு பூஜையும், நேற்று முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. சித்திவிநாயகர் கோயில் ஊரணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், இரவில் கலைநிகழ்ச்சியும் நடந்தது.