தாழையூத்து வனப்பேச்சி அம்மன் கோயிலில் 108 கலச பூஜை
ADDED :4816 days ago
திருநெல்வேலி: தாழையூத்து உக்கிரன் நகர் வனப்பேச்சி அம்மன் கோயிலில் 108 கலச மகாலெட்சுமி பூஜை வழிபாடு நாளை (14ம் தேதி) நடக்கிறது.உலக நன்மைக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும் தாழையூத்து வனப்பேச்சி அம்மன் கோயிலில் 108 கலச மகாலெட்சுமி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பூஜைகளை சத்திரம் குடியிருப்பு ஆதி மகா கணபதி ஆலய அர்ச்சகர் காவேரிராமன் நடத்துகிறார். ஏற்பாடுகளை அர்ச்சகர் இசக்கி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.