சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா
ADDED :1164 days ago
சிவகாசி: சிவகாசி பேச்சியம்மன் கோயில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா நடந்தது. அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனின் வளைகாப்பிற்கு 108 விதமான பழ வகைகள், பலகாரங்கள் மாலை வஸ்திரங்கள் உள்ளடக்கிய சீமந்த சீர்வரிசை சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு அம்மனுக்கு சாற்றிய வளையல், மங்கல நாண், தாம்பூலம், பலகாரம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.