ஆணவமும்... ஆனந்தமும்!
ADDED :1240 days ago
வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களில் ‘நான்’ என்ற எண்ணம் கொண்டவர்களே அதிகம். இந்த எண்ணம் ஒருவருக்கு தோன்றிவிட்டால், அவர் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறார் என்று பொருள். இது எதனால் உருவாகிறது?
முயற்சி அனைத்திலும் வெற்றி பெறும் பலருக்கு, இந்த ஆணவம் வந்துவிடுகிறது. இப்படி உள்ளோர் சிறு தோல்வி சந்தித்தாலே கூனிக்குறுகிவிடுவர். இவற்றை தவிர்த்தால் ஆனந்தமாக வாழலாம்.