தரணீஸ்வரர் புஷ்பவனேஸ்வரி கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1164 days ago
கமுதி: கமுதி அருகே அ.தரைக்குடி கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட தரணீஸ்வரர் புஷ்பவனேஸ்வரி கோயிலில் 38வது ஆண்டு திருக்கல்யாண விழா நடந்தது. தேவஸ்தான அலுவலகம் செயல் அலுவலர் குகனேஸ்வரன் தலைமை வகித்தார். இதனை முன்னிட்டு காலை கணபதி ஹோமம் தொடங்கி உற்சவர் தரணீஸ்வரர், புஷ்பவனேஸ்வரிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.பின்பு பக்தர்களுக்கு மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்பு மூலவரான தரணீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது . கமுதி சுற்றியுள்ள ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர். ஆனந்த குருக்கள் திருப்பணிக்குழு மற்றும் கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.