உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்த கோவிலில் தான், வினோதமான வழிபாடாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 9:45 மணிக்கு கோவில் பூசாரி கொடிமரத்திற்கு விளக்கு ஏற்றினார். சுவாமி உத்தரவு படி கோவில் வளாகத்தில் தேங்காய் உடைக்கும் பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். பக்தர்கள் தலையில் தேங்காயை, பூசாரி பெரியசாமி உடைத்தார். 570 பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன், லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜோதி, ஹிந்து அறநிலைத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பஞ்சப்பட்டி வட்டார மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டாக்டர்கள் தினேஷ்குமார், ஸ்ரீஜா, ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் மருத்துவ முகாம் நடந்தது.அதுபோல, திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே, ஆண்டியபட்டி மகாலட்சுமி அம்மன், கருப்பசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் உடலில் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !