மொடக்காற்று கருப்பணசாமி கோவிலில் பெரிய கும்பிடு விழா
ADDED :1196 days ago
வேடசந்தூர்: ஸ்ரீ ராமாபுரம் ஊராட்சி மண்டபத்தில் உள்ள மொடக்காற்று கருப்பணசாமி கோவிலில், 32 -ம் ஆண்டு பெரிய கும்பிடு திருவிழா நடந்தது. சுவாமி அலங்காரம் மற்றும் வான வேடிக்கையுடன் துவங்கிய விழாவில், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. நிர்வாக கமிட்டி தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் பங்கேற்று, புதிய கட்டடங்களை திறந்து வைத்து, அன்னதானத்தை துவக்கி வைத்தார். காலை முதல் மாலை வரை அன்னதானமும், இரவு அரிச்சந்திரா புராண நாடகமும் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.