உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வீகம் நிறைந்தது நமது பாரதம்

தெய்வீகம் நிறைந்தது நமது பாரதம்


என்கிறார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

* நமது பாரதம் தெய்வீகமும், கலாசாரமும் நிறைந்த பசுமையான நாடு.
* ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள தர்மத்தைக் கடைப்பிடி. இன்பமாக வாழ்வாய்.
* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. எல்லாம் நல்லதாக நடக்கும்.
* ராமபிரான், கிருஷ்ணபிரான் அவதாரம் செய்த பூமியான இந்தப் பாரதம் புண்ணியம் மிக்கது.  
* புண்ணியத் தலங்களுக்கு சென்றால், நாம் செய்த பாவங்களின் சக்தி குறையும்.
* நியாயமான வழியில் வாழ்க்கையை நடத்தினால், எல்லா நன்மையும் உண்டாகும்.
* பசுவிற்கு உணவு கொடு. உனது பாவம் தீரும்.
* தினமும் தர்மம் செய். உன் சக்திக்கு உட்பட்ட தர்மம் எதுவானாலும் நல்லதே.
* தர்மத்தை நீ காத்தால், தர்மம் உன்னை காக்கும்.
* தினமும் இரண்டு நிமிடமாவது மவுனமாக இரு.
* விநாயகரை வணங்கு. முயற்சியில் வெற்றி பெறுவாய்.  
* ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள விஷயங்களுக்கு செலவிடு.  
* நாம் சாப்பிடும் உணவு துாய்மையாக இருந்தால், மனமும் சுத்தமாக இருக்கும்.
* நீ செய்த வினைகள் மட்டுமே, உன்னை விட்டுப்பிரியாமல் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !