ஸ்ரீவித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :1219 days ago
திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி, தமிழ்நாடு சர்வோதய சங்க வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.கடந்த 23ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், யாகசாலை பூஜைகள், வழிபாடு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியன நடைபெற்றது.நேற்று, காலை 6:00 மணிக்கு விமான கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீவித்யா கணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவசெந்தில் குருக்கள் நடத்தி வைத்தார்.தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக ஏற்பாடுகளை தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகிகள் உட்பட பலர் செய்திருந்தனர்.