வரிச்சிக்குடி வரசித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
காரைக்கால்: காரைக்கால் வரிச்சிக்குடி வரசித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
காரைக்கால் கோட்டுச்சேரி கொம்யூன் வரிச்சிக்குடி கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது பழமை வாய்ந்த கோவிலில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு திருப்பணி தொடங்கியது. திருப்பணி முடிக்கப்பட்டது. பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ம் தேதி கணபதி ஹோமமும்,கடந்த 27ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள்,மங்கள வாத்தியங்கள் முழங்க அனைத்து ஆலய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து வரசித்தி விநாயகர் மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. மஹா மகாகும்பாபிஷேகத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், முன்னாள் எம்.எல்.ஏ.ஒமலிங்கம், தலைவர் நாகராஜன் துணை தலைவர் சேகர், செயலாளர் முத்துராமன்.துணை செயலாளர் அப்பு மற்றும் சோமு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கவாமி தரிசனம் மேற்கொண்டனர்.