உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவியத் தமிழில் கணபதி அர்ச்சனை

காவியத் தமிழில் கணபதி அர்ச்சனை


திருப்புகழ் மதிவண்ணன்

ஓம் அகரமுதல் எனத் திகழ்வாய் போற்றி
ஓம் அண்டமே பெற்றோர் என்றாய் போற்றி
ஓம் அவல்பொரி அப்பம் உவப்பாய் போற்றி
ஓம் அறிவே விரிவே செறிவே போற்றி
ஓம் அகத்தியர் பணியும் முகத்தவ போற்றி
ஓம் அருஉருவான திருவுரு போற்றி
ஓம் அங்குச பாசச் செங்கர போற்றி
ஓம் அச்சம் தவிர்க்கும் உச்சமே போற்றி
ஓம் அறுகம் புல்லில் உருகுவாய் போற்றி
ஓம் அற்புத பொற்பத கற்பக போற்றி
ஓம் அறுமுகன் முன்வரு கரிமுக போற்றி
ஓம் அத்தா முத்தா சுத்தா போற்றி
ஓம் ஆவணி சதுர்த்தி மேவுவாய் போற்றி
ஓம் ஆகமம் போற்றும் ஏகனே போற்றி
ஓம் ஆனை முகத்துத் தேனே போற்றி
ஓம் ஆதி பகவச் சோதி போற்றி
ஓம் ஆழ்பவர் உள்ளம் வாழ்பவ போற்றி
ஓம் இன்னல் அகற்றும் மன்ன போற்றி
ஓம் இருளை நீக்கும் அருளே போற்றி
ஓம் இதயம் பதியும் உதயமே போற்றி
ஓம் இகபர வாழ்வின் சுகமே போற்றி
ஓம் இனிய முக்திக் கனியே போற்றி
ஓம் இருவினை களையும் இறைவ போற்றி
ஓம் ஈறிலா இன்பப் பேறே போற்றி
ஓம் ஈசா தேசா நேசா போற்றி
ஓம் உம்பர் தருவாம் செம்பொனே போற்றி
ஓம் உகர மகர அகர போற்றி
ஓம் உலக நுதல்திகழ் திலக போற்றி
ஓம் உத்தமி அம்பிகை புத்திர போற்றி
ஓம் ஊக்கம் அளிக்கும் நோக்கே போற்றி
ஓம் எருக்க மலரின் பெருக்கனே போற்றி
ஓம் எய்ப்பில் இனிய வைப்பே போற்றி
ஓம் எண்குணம் கொண்ட தண்குண போற்றி
ஓம் எள்ளும் பொரியும் கொள்ளுவாய் போற்றி
ஓம் எண்ணிய அருளும் திண்ணிய போற்றி
ஓம் ஏக அநேக போகனே போற்றி
ஓம் ஏற்றுவார் இடரை மாற்றுவாய் போற்றி
ஓம் ஐயனே யானை மெய்யனே போற்றி
ஓம் ஒப்பிலா தொப்பை அப்பனே போற்றி
ஓம் ஒற்றை மருப்புடை கொற்றவ போற்றி
ஓம் ஓங்காரத்தின் நீங்காய் போற்றி
ஓம் ஓமம் ஏற்கும் ேக்ஷம போற்றி
ஓம் ஒளவைக் கருளிய செவ்விய போற்றி
ஓம் கயமுகன் கடிந்த ஜெயமுக போற்றி
ஓம் கணபதி ஆன குணநிதி போற்றி
ஓம் கல்லார் மனத்தில் நில்லாய் போற்றி
ஓம் கருமம் முடிக்கும் பெரும போற்றி
ஓம் கடல் உலகாளும் கடவுளே போற்றி
ஓம் களிமண் உருவிலும் ஒளிர்பவ போற்றி
ஓம் காரணன் ஆன பூரண போற்றி
ஓம் காரிய வீரிய சீரிய போற்றி
ஓம் கீர்த்திகொள் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் குருவாய் எனக்கு வருவாய் போற்றி
ஓம் குடிலை மந்திர வடிவே போற்றி
ஓம் கூப்பிய கைகளை ஏற்பவ போற்றி
ஓம் கை ஐந்துடைய ஐயனே போற்றி
ஓம் கொற்றவன ஆன நற்றவ போற்றி
ஓம் கோட்டால் பாரதம் தீட்டுவோய் போற்றி
ஓம் கோழியான் உடன்வரு ஊழியான் போற்றி
ஓம் சங்கட ஹரனாய்ப் பொங்குவாய் போற்றி
ஓம் சந்தி சதுக்கம் முந்துவாய் போற்றி
ஓம் சதுர்த்தி நடமிடு பதத்த போற்றி
ஓம் சித்தி புத்தி அத்தி போற்றி
ஓம் சீலனே சக்தியின் பாலனே போற்றி
ஓம் சுந்திர மந்திர எந்திர போற்றி
ஓம் சூட்சும இயக்க ஆட்சியே போற்றி
ஓம் சைவக் கொழுந்தாம் தெய்வ போற்றி
ஓம் சொற்பதம் கடந்த சிற்பர போற்றி
ஓம் ஞான மதம்பொழி யானையே போற்றி
ஓம் ஞால முதல்வனாம் சீல போற்றி
ஓம் ஞாயிறாய் ஒளிரும் துாயவ போற்றி
ஓம் தருணம் உதவும் பிரணவ போற்றி
ஓம் தத்துவம் கடந்த வித்தக போற்றி
ஓம் தந்தையை வலஞ்செய் தந்தா போற்றி
ஓம் தழைத்த செவியுடன் இழைத்தாய் போற்றி
ஓம் தலைவர்க்கெல்லாம் தலைவா போற்றி
ஓம் தாண்டவமாடும் ஆண்டவ போற்றி
ஓம் தாரக வடிவுகொள் சீரக போற்றி
ஓம் தானந்தமான ஆனந்த போற்றி
ஓம் திருவும் சீரும் தருவாய் போற்றி
ஓம் தீர்த்தமே தலமே மூர்த்தமே போற்றி
ஓம் துப்பார் மேனி அப்பனே போற்றி
ஓம் துாண்டா ஜோதியாய் மூண்டவ போற்றி
ஓம் தேசம் காக்கும் நேசா போற்றி
ஓம் தேர்வலம் ஏற்கும் ஆர்வல போற்றி
ஓம் தொந்தி வயிற்று தந்தி போற்றி
ஓம் தொப்பண குட்டின் அர்ப்பண போற்றி
ஓம் நாயகம் ஆன தாயக போற்றி
ஓம் நிமலா அமலா விமலா போற்றி
ஓம் நீறு புனைந்தருள் பேறே போற்றி
ஓம் நுாலில் முதல்வரு சீல போற்றி
ஓம் பண்ணியம் ஏந்தும் புண்ணிய போற்றி
ஓம் பவவினை போக்கும் சிவசுத போற்றி
ஓம் புல்லிலும் பூசை கொள்ளுவாய் போற்றி
ஓம் பேழை வயிறுகொள் வேழமே போற்றி
ஓம் போதா நாதா வேதா போற்றி
ஓம் போக்கும் வரவும் ஆக்குவாய் போற்றி
ஓம் மத்தள வயிறுடை உத்தம போற்றி
ஓம் மந்திரம் ஏற்று முந்துவாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றே ஓங்கினாய் போற்றி
ஓம் முக்தியை ஊட்டும் சக்தியே போற்றி
ஓம் மூர்த்தியில் முதலாம் கீ்ரத்தியே போற்றி
ஓம் மூஷிக வாகன போஷிக போற்றி
ஓம் மோதகம் படைப்பவர் சாதக போற்றி
ஓம் வல்லபை இணைந்த நல்லவ போற்றி
ஓம் வரமே அளிக்கும் பரமே போற்றி
ஓம் வணங்குவார் இல்லம் இணங்குவாய் போற்றி
ஓம் வெற்றி விநாயக பற்றினேன் போற்றி
ஓம் வேண்டுதல் அளித்தே ஆண்டருள் போற்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !