உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி முத்துநாச்சியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

தேவி முத்துநாச்சியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

ரெகுநாதபுரம், ரெகுநாதபுரம் தேவி முத்துநாச்சியம்மன் கோயில் 58ம் ஆண்டு வருடாபிஷேகம், பாலாபிஷேக விழா நடந்தது. விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், அலகு குத்தி நேர்த்தி கடன் பக்தர்களால் கொண்டுவரப்பட்டு தேவி முத்து நாச்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. 16 வகை அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தன. கோயில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். மாவிளக்கு, நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !