உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவம் கோவிலில் 25ல் நவராத்திரி விழா

கூவம் கோவிலில் 25ல் நவராத்திரி விழா

கூவம்-கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள கூவம் ஊராட்சியில் உள்ளது திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில்.இங்கு இந்த ஆண்டு நவராத்திரி விழா, வரும் 25ம் தேதி  துவங்கி, ஒன்பது நாள் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், நடைபெறும்.பின் தினமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியலா நடைபெறும்.வரும் 4ம் தேதி மாலை,  பரிவேட்டை உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !