வைத்தியநாதசுவாமி கோவிலில் புரட்டாசி பவுர்ணமி வழிபாடு
ADDED :1153 days ago
திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று மாலை, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் அசனாம்பிகை அம்மன் மற்றும் வைத்தியநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்றனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.