தர்மம் செய்ய துாண்டிய முல்லா
ADDED :1107 days ago
தான் வாழும் ஊரில் புதிய பள்ளிக்கூடம் ஒன்றை கட்ட நினைத்தார் முல்லா. அதற்காக பணக்காரரிடம் மட்டுமே நன்கொடையைப் பெற நினைத்தார். ஏழைகள் பலர் நன்கொடைகள் வழங்க உற்சாகம் அடைந்தார். அவ்வூரில் கஞ்சனான பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் தான் வேலையாளிடம் ‘‘என்னைத்தேடி முல்லா வருவார் நான் இல்லை என சொல்லிவிடு’’ எனக்கூறியிருந்தார். முல்லாவும் வரவே வேலையாளும் அவ்வாறே சொன்னார். வந்தவர் சென்று விட்டாரா என பணக்காரர் எட்டிப்பார்க்க அதைக் கவனித்த முல்லா ‘‘உங்கள் முதலாளியிடம் தலையை மாட்டிக் கொண்டு போகச்சொல்’’ என்றார்.
இதைக்கேட்ட பணக்காரர் வெட்கப்பட்டார். பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிறைய தொகையை கொடுத்தார்.