வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1458 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக சித்தூரை சேர்ந்த துரைசாமி என்ற பக்தர் ஒரு லட்சத்து 116 ரூபாய் காண காசோலை யை கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டியிடம் வழங்கினார் இவருக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்ததோடு விநாயகரை தரிசனம் செய்தவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் கோவில் அதிகாரிகள் வழங்கினர்.