உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் உற்சவர் சின்ன குமாரசாமிக்கு ஜடிபந்தனம்

பழநி மலைக்கோயில் உற்சவர் சின்ன குமாரசாமிக்கு ஜடிபந்தனம்

பழநி: பழநி மலைக்கோயில் உற்ஸவரான சின்ன குமார சுவாமிக்கு கலாகர்ஷணம், ஜடிபந்தனம், நடைபெற உள்ளது.

பழநி மலைகோயில் உற்ஸவரான சின்ன குமாரசுவாமி தினமும் தங்கரத புறப்பாட்டில் எழுந்தருள்வார். மேலும் மலைக்கோயில் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் உற்ஸவ மூர்த்திக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும். இந்நிலையில் உற்ஸவர் சின்னகுமாரசுவாமிக்கு அக்.,19, அன்று இரவு 8:00 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் செய்து கலாகர்ஷணம், ஜடிபந்தனம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்.,20 காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் உற்ஸவர் சின்ன குமாரசுவாமிக்கு கலசாபிஷேகம் மஹாபிஷேகம், மஹாதீபாதாரணை நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படும் அன்று மதியம் 1:30 மணி வரை உற்ஸவர் சின்ன குமாரசாமிக்கு உபய அபிஷேகங்கள் நடைபெறாது உச்சிக்கால பூஜைக்கு பின் மதியம் 1:30 க்கு மேல் உபய அபிஷேகங்கள் நடைபெறும் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !