பேரூர் ஆதீன மடத்தில் நூல் வெளியீட்டு விழா
ADDED :1086 days ago
பேரூர்: பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்கர் திருமடத்தில், கோவைகிழார் கட்டுரைகள் தொகுதி 1 என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்கர் திருமடத்தில், மகம் நாள் சாந்தலிங்கர் குரு வழிபாடு நேற்று நடந்தது. இதனைத்தொடர்ந்து, தவத்திரு சிதம்பர அடிகளார் நூலகத்தின் சார்பில், கோவைகிழார் கட்டுரைகள் தொகுதி 1 என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், கோவைகிழார் கட்டுரைகள் தொகுதி 1 என்ற நூலை வெளியிட, அதனை, கலைவாணி கல்வி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பெற்றுக்கொண்டார். இதில், பேரூர் தமிழ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் உமாபதி, மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூல் வெளியீட்டை தொடர்ந்து, பேரொளி வழிபாடும், அன்னம் பாலிப்பும் நடைபெற்றது.