கந்தசஷ்டி நிறைவு விழா முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம்
பல்லடம்: கந்தசஷ்டி விழா நிறைவை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.பல்லடம் அடுத்த, மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், அக்., 25 அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. காப்பு கட்டிய பக்தர்கள், கந்தசஷ்டி விரதத்தை துவக்கினர். நேற்று முன்தினம் இரவு, வான் வேடிக்கை, மற்றும் பக்தர்களின் ஆடல் பாடலுடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கந்தசஷ்டி விழா நிறைவு நாளான நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, பூ, பழம், மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து, பக்தர்களின் விரதம் நேற்றுடன் நிறைவடைந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.