உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன் சாமி தரிசனம்

வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன் சாமி தரிசனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்காள  மாநில பொறுப்பு  ஆளுனருமான  இல.கணேசன் தனது சகோதரர் கோபாலன்  குடும்பத்துடன் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்.  வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி சன்னதி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில்  அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக கோவிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் இல.கணேசனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா எஸ்.பி.நிஷா ஆகியோர் புத்தகம்  கொடுத்து  வரவேற்றனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் ஆளுநர் இல.கணேசனுக்கு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை , வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் வருகையை ஒட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் டி.எஸ்.பி. லாமெக்   தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !