உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, பொட்டு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, பொட்டு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, பொட்டு நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பூசாரியான அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 40. இவர் நேற்று முன்தினம் கோவிலில் விளக்கேற்றிவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த அரை சவரன் தாலி மற்றும் அரை சவரன் பொட்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவற்றின் மதிப்பு ரூபாய். 30 ஆயிரம். இது குறித்து கோவில் பூசாரியான மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !