உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை உண்டியலில் ரூ.58.6 லட்சம் காணிக்கை

மருதமலை உண்டியலில் ரூ.58.6 லட்சம் காணிக்கை

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கை தொகையாக, 58.6 லட்சம் ரூபாய் இருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 53 லட்சத்து 34 ஆயிரத்து 474 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 86 ஆயிரத்து 11 ரூபாயும், கோசாலை உண்டியலில், 4 லட்சத்து 49 ஆயிரத்து 229 ரூபாயும் என, மொத்தம், 58 லட்சத்து 69 ஆயிரத்து 714 ரூபாயும், 96 கிராம் தங்கமும், 2,020 கிராம் வெள்ளியும், 2,675 கிராம் பித்தளையும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில், பக்தர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !