உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் விடுதிகளுக்கு நன்கொடை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் விடுதிகளுக்கு நன்கொடை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா  மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் சார்பில் கட்டப்படும் விடுதிகளுக்கு நன்கொடையாக ஹைதராபாத்தை  சேர்ந்த ராம பத்ரா என்ற பக்தர் குடும்பத்தினர் ரூபாய் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கான காசோலையை நன்கொடையாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி யிடம் காசோலையாக வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது. கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ விநாயகப் பெருமானை தரிசனம் செய்த பின்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !