மனம் துாய்மையாகும்
ADDED :1041 days ago
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர், ‘‘கடவுளை உணர்ந்து கொள்ள கோயிலுக்குத்தான் செல்ல வேண்டுமா?’’ எனக்கேட்டார்.
அதற்கு அவர், ‘‘தாகமாக உள்ளது. குடிக்கத் தண்ணீர் கொண்டு வாருங்கள்’’ என்றார். அவரும் ஓடிச் சென்று செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
விவேகானந்தர், ‘‘உங்களிடம் தண்ணீர்தானே கேட்டேன். கூடவே செம்பு எதற்கு கொண்டு வந்தீர்கள்’’ எனக்கேட்டார்.
‘‘சுவாமி! வெறும் தண்ணீரை மட்டும் எப்படி கொண்டு வரமுடியும்’’ என்றார்.
‘‘இதுபோல் கடவுளை உணர்ந்து கொள்ள கோயில் தேவை. அங்கு சென்றால் மனம் துாய்மையாகும்’’ என சொன்னார்.