ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி: 108 போர்வை சாற்றும் வைபவம்
ADDED :1040 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்திர சயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு, 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு 11:00 மணிக்குமேல் கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்களுக்கு 108 போர்வைகளை சாற்றி அனிருத் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். பால முகுந்தனின் அரையர்சேவை நடந்தது. பின்னர் வேதபிரான் சுதர்சனன் கைசிக புராணம் வாசித்தார். இன்று காலை வரை நடந்த உற்ஸவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.