திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1390 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மார்கழி மாத தேய்பிற பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம், பால் அபிஷேகம் நடந்தது. பெரிய நந்திய பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ரிஷிப வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் (பிரதோஷ நாயகர்) மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.