ராமேஸ்வரம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு : பக்தர்கள் தரிசனம்
ADDED :1089 days ago
ராமேஸ்வரம்: வைகுண்ட ஏகாதசி யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று வைகுண்ட ஏகாதசி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து மதியம் 1 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமான் புறப்பாடாகி, ராமர் தீர்த்த குளத்தில் எழுந்தருளினர். இங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கும் உற்சவம் நடந்தது. பின் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், அங்கிருந்து புறப்பாடாகி திருக்கோயிலில் உள்ள சேதுமாதவர் சன்னதியில் எழுந்தருளினர். பின் சொர்க்கவாசல் திறந்ததும் சேதுமாதவர், ஸ்ரீ ராமருக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.