பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை காண 41 ஆயிரம் பேர் முன்பதிவு
ADDED :1000 days ago
பழநி: பழநி, மலைக்கோயில் மூலவர் சன்னதி கும்பாபிஷேகத்தை காண 41ஆயிரம் பக்தர்களுக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.
பழநி மலைக்கோயில் மூலவர் சன்னதி கும்பாபிஷேகம் ஜன.27 நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க பக்தர்கள், மலைக்கோயில் மற்றும் ஹிந்து சமய அறநிலைத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதில் குலுக்கல் முறையில் 2000 பக்தர்கள் தேர்வு செய்ய நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வரை 41 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் முன்பதிவு செய்து உள்ளனர். பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில் 7 போட்டோ ஆதாரங்கள் சான்றாக பதிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் ஆதார் எண்ணை மட்டும் பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் கோயில் இணையதளத்தில் வகை செய்யப்பட்டது.