உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை: பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை

தை அமாவாசை: பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் பாலசுப்பிரமணியர் ராஜேந்திர சோழீஸ்வரர் அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கவுமாரியம்மன் கோயிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது. வரதராஜ பெருமாள் கோயிலில் வரதராஜப் பெருமாள், மகாலட்சுமி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கம்பம் ரோடு காளியம்மன் கோவிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது. பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது. வீச்சு கருப்பணசாமி, மண்டு கருப்பணசாமி, புனுகு கருப்பணசாமி கோயில்கள் உட்பட கருப்பண்ணசாமி கோயில்களில் குலதெய்வம் வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !