/
கோயில்கள் செய்திகள் / திருச்சி காவிரி ஆறு ஓடத்துறை படித்துறையில் தர்ப்பணம் கொடுக்கு குவிந்த மக்கள்
திருச்சி காவிரி ஆறு ஓடத்துறை படித்துறையில் தர்ப்பணம் கொடுக்கு குவிந்த மக்கள்
ADDED :1064 days ago
திருச்சி : தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆறு ஓடத்துறை படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசையில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு ஆற்றங்கரைகளில் கூடி பூஜை செய்து வழிபட்டு திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து, ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இன்று தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆறு ஓடத்துறை படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.