ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் மிட்டாய் வழிபாடு
                              ADDED :999 days ago 
                            
                          
                           ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவில் வீற்றிருக்கும் முருகனை வழிபட்டு செல்வது வழக்கம். தங்களது கோரிக்கைகள் நிறைவேறிய பின்பு இங்குள்ள மயில் வாகனம் மற்றும் மரங்களில் மிட்டாய்களை வைத்து வைத்து வழிபாடு செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்கின்றனர். நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை வேலப்பருக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது.